புதுக்கோட்டை பயணத்திற்கு, மொத்தம் பதிநான்கு நபர்களைக் கொண்ட எங்கள் குழு, ஆறாம் தேதி மாலையில் கிளம்பி, மறுநாள் காலையில் திருச்சி வந்து சேர்ந்தது.
Day 1 (Saturday, June 7, 2003)
நார்த்தாமலை:
For a picture version of this post, go here.
எங்கள் புதுக்கோட்டைப் பயணத்தின் முதல் நாள் 'பளீர்' நீல வானத்துடனும், இளம் வெயிலுடனும், Rockfort Expressஇன் உட்புறத்திலும் ¬ரம்பித்தது.
ரயிலை விட்டு இறங்கி வெளியே வந்து, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த luxury (நிஜமாகவே) coachஇல் ஏறி அமர்ந்தபோது மணி ஏழு.
சிலு சிலுவென்று காற்றை அனுபவித்த படியே, புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ, தொலைவிலிருந்த நார்த்தாமலையை நோக்கி நகர்ந்தோம்.
சென்னையில் சமவெளிகளைப் பார்த்த பிறகு புதுக்கோட்டைப் பகுதியின் பாறைப்பிரதேசங்களும், சிறிய மலைகளும் வித்தியாசமாகத் தான் தெரிந்தன. ரோட்டோர வயல்களின் நட்ட நடுவில் திடீரென்று முளைக்கும் பிரம்மாண்டமான பாறைகள் விசித்திரமானவைதான். (இப்பேர்ப்பட்ட பாறைப் பிரதேசத்தில் ஏன் சிற்பங்களாக செதுக்கித் தள்ளியிருக்க மாட்டார்கள்?).
தார்ச்சாலை புதுக்கோட்டையின் கிராமப்புறங்களின் வழியாக ஊர்ந்து சென்றது. கருவேல மரங்களும் வேப்ப மரங்களும் மெல்லிய கிளைகளை நீட்டியபடி எங்களை வரவேற்றன. மணற்பிரதேசமும், பாறைகளும் மாறி மாறித் தோன்றின. இறுதியாக சாலை ஒரு வளைவு வளைந்து திரும்பியது.
வேனை விட்டு இறங்கியபோது, எங்களுக்கு எதிரே ஒரு சிறிய ஒற்றையடிப்பாதை இரு உயரமான பாறைகளுக்கு இடையில் குறுகலாகச் சென்றது. சற்றே மேடான அந்த இடத்தைத் தாண்டி வந்த பொழுது...
நேர் எதிரே, நார்த்தாமலைக்கூட்டத்தின் பிரதான மலைப்பகுதியான 'மேல மலை' உயர்ந்து நின்றது. இடதுபக்கம், கண்ணாடியைப் போல் பளபளக்கும் மேற்பரப்புடன் ஒரு சிறிய சுனை (வெயிற்காலத்திலும் காய்ந்து போகாதாம்). எங்கே பார்த்தாலும் சிறிதும் பெரிதுமாகப் பாறைகள், பாறைகள், பாறைகள்.
இந்த இடத்தில், நார்த்தாமலையைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம்.
நார்த்தாமலைப் பகுதி மொத்தம் ஒன்பது மலைகளைக் கொண்டது. மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை, மற்றும் பொன்மலை- இவைதான் அவற்றின் பெயர்கள்.
அது சரி, இந்த மலைப் பகுதிக்கு 'நார்த்தாமலை' என்ற பெயர் எப்படி வந்தது? ஒரு காலத்தில், இது 'நகரத்தார் மலை' என்று அழைக்கப்பட்டு வந்ததாம். நார்த்தாமலை இன்று போல் ளற்ற மொட்டைப் பாறைப் பிரதேசமாக இல்லாமல், அந்தக் காலத்தில் செல்வம் கொழிக்கும், வாணிபம் பெருகும் பகுதியாக, வணிகர்களின் head-quartersக இருந்திருக்கிறது. குறிப்பாக, 'நானாதேசத்து ஐநூற்றுவர்' என்கிற வணிகர் குழுவிற்கு தலைமைச் செயலகமாக இருந்திருக்கிறது. (நார்த்தாமலை இத்தனைச் செல்வச் செழிப்புடனும், சீரும் ச்¢றப்புமாக இருந்ததற்கான அடையாளங்கள் இப்பொழுது எதுவும் இல்லை.)
ஏறக்குறைய ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்னால், (between 7th AD and 9th AD), பல்லவ இராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த நார்த்தாமலை, தஞ்சாவூர் முத்தரையர் வம்சத்தின் நேரடி ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது ('பொன்னியின் செல்வ'னின் முதல் பாகத்தில் வந்தியத்தேவனின் 'குருதையை' பழுவூர் வீரர்கள் கிண்டலடிப்பார்களே...அந்த முத்தரையர் குலம்தான்). ஒன்பதாம் நூற்றாண்டில், விஜயாலய சோழன் முத்தரையர்களை அடக்கி ஒடுக்கி மூட்டை கட்டியனுப்பிய பிறகுதான் நார்த்தாமலை சோழர்கள் வசம் வந்திருக்கிறது.
முதலாம் இராஜராஜனின் ஆட்சிக்காலத்தின் பொழுது (985-1014 AD), ‘தெலுங்குக் குல காலபுரம்’ என்று அம்மன்னனின் பட்டபெயர்களில் ஒன்றால் நார்த்தாமலை அழைக்கப்பட்டிருக்கிறது.
இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, நார்த்தாமலை முஸ்லிம்கள் வசம் இருந்திருக்கிறது. பிறகு, பதினாலாம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களின் திக்கத்திற்குக் கீழே வந்தது. ஒரு விஷயம் தெரியுமா? விஜயநகரத்தைச் சேர்ந்த ‘அக்கல் ராஜா’ என்ற பெரிய மனிதர் ஒருவர் இந்தப் பகுதியை 'ண்டு' வந்து, அங்கிருந்த ‘விசெங்கி நாட்டுக் கள்ளர்’களின் அட்டகாசத்தை ஒழித்துக் கட்டியபொழுது, பல்லவராய இளவரசியான 'அக்கச்சி' (அட, நிஜமாவே அதாங்க அவங்க பேரு!) என்பவரால் ஆள் வைத்துக் கொல்லப்பட்டார். அவர் இறந்தவுடன், அவரது ஏழு மனைவியரும் நார்த்தாமலைப் பகுதியின் ஓரிடமான 'நொச்சிக் கண்மாயி'ல் தீக்குளித்து இறந்து போனார்களாம்! இவர்களுடைய சந்ததியினர் இன்றுவரை ‘உப்பிலிக்குடி’ என்ற ஊரில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ‘உப்பிலிக்குடி ராஜா’க்கள் என்று அழைக்கப்படுகின்றனராம்.
இப்படியாகப்பட்ட சிறப்புடைய நார்த்தாமலையின் ஒரு மலையான ‘மேல மலை’யின் மேலேற சரியான பாதை என்று எதுவும் கிடையாது. மலையாடு போல் காலை ஜாக்கிரதையாக வைத்துத்தான் செல்ல வேண்டும்:-). சூரியன் மெதுவாக வானத்தில் ஏறிக்கொண்டிருக்க, நாங்களும் பாறைகளைத் தாண்டிச் சென்றோம். தலைக்கு மேலே உயர்ந்த மலைச்சுவர்களில் தேனடைகள் கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்தன். அங்கங்கே பாறைகளின் இடைவெளியில் காட்டுச்செடிகள் பூத்திருந்தன.
ஒரு வழியாக பாதையைக் கடந்தவுடன், சுற்றிலும் எட்டு சன்னிதிகளுடன் (அவற்றில் இப்போது றுதான் மிச்சம்), கச்சிதமான ஒரு சிறிய கோயில் தென்பட்டது. இடதுபக்கம் செங்குத்தாக ஏறிய மலைச்சுவரின் ஒரு பகுதியில் குடைவரைக் கோயில்கள் இருந்தன. அவற்றில் ஒன்றான 'சமணர் குடகு' என்கிற குகையில்- இதற்குப் 'பதினெண் பூமி விண்ணகரம்' என்ற பெயரும் உண்டு- ஆறடி உயரத்திற்கு விஷ்ணு பகவானின் பன்னிரண்டு வடிவங்கள் மிக அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. (இப்போது அந்தக் கோயிலே ASIயால் இழுத்து மூடப்பட்டிருக்கிறது). இந்தக் கோயிலின் முன்னால், யானைகளும் யாளிகளும் குதி போடும் ஒரு குட்டி மேடை இருக்கிறது(ஒரு காலத்தில் தூண்கள் உள்ள மண்டபமாக இருந்திருக்க வேண்டும்). இதன் அடியில் முதலாம் குலோத்துங்கன், மற்றும் மாறவர்மன் சுந்தர பாண்டியன் போண்ற அரசர்கள் காலத்துக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. குறுக்கும் நெடுக்குமாக வலை போட்டுத் தடுத்திருந்த கதவுகள் வழியாக எட்டிப்பார்த்துவிட்டு, 'பழயிலி ஈஸ்வரம்’ என்று அழைக்கப்பட்ட குடைவரைக் கோயிலை நோக்கி கவனத்தைத் திருப்பினோம்.
பல்லவமன்னன் மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் (826- 849AD), முத்தரையர் தலைவன் ‘சாத்தன் பழயிலி’யால், ‘பழையிலி ஈஸ்வரம்’ என்னும் குடைவரைக் கோயில் வெளிக்கொணரப் பட்டது. இதைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் கோயிலில் காணப்படுகின்றன. இப்பொழுது கர்ப்பக்கிருஹம் மட்டுமே மிஞ்சியிருக்கும் இந்தக் கோயில், ஒரு காலத்தில் முன்மண்டபங்களோடு இருந்திருக்கிறது.
அடுத்து, ‘விஜயாலய சோழீஸ்வர’த்தை நோக்கி நகர்ந்தோம்.
முத்தரையர் தலைவனான இளங்கோ ஆதி அரையன் என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டது என்பதற்கான சான்றுகளை துவாரபாலகர்களுக்கு அடியில் உள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோயிலின் உள்ளே ஓவியங்களூம் இருக்கின்றனவாம் (பூட்டியிருந்ததால் எங்களால் பார்க்க முடியவில்லை) பிற்காலச் சோழ வம்சத்தின் ரம்ப வருடங்களில் புதுப்பிக்கப்பட்டது என்பதாலேயே இந்தக் கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. கோயில் என்று பார்த்தால் அது சிறியதுதான். சமீபத்தில் ASIஇன் புண்ணியத்தில் தூசும் மாசும் இன்றி பளிச்சென்று இருந்தது. இரு துவாரபாலகர்கள் ஒயிலாகச் சன்னதியைக் காத்துக்கொண்டிருக்க, மூடப்பட்டிருந்த கதவுகளின் வழியாக இருளுக்குள் எட்டிப்பார்த்துவிட்டு நகர்ந்தோம். சன்னதிகளைச் சுற்றிக்கொண்டு சென்ற கற்சுவர்களில் பாதி கேட்பாரற்று இடிந்து கிடந்தன. மலையின் ஓரத்தில் இரு படிகள் தாண்டினால் - கீஈஈஈஈழே -நார்த்தாமலைப் பகுதியை ஒட்டிய சிறிய கிராமம், காலை வெயிலில், கீழே பச்சைப் பசேலென்று தென்னந்தோப்பும், அவற்றுக்கு நடுவே உயர்ந்து நின்ற கோபுரமும், சுற்றிலும் வயல் வெளிகளுமாக விரிந்தது.
கேமராக்களினால் அந்த இடத்தை' சுட்டு'த் தள்ளிய பின்னர், கோயிலைத் தாண்டி, மலை மீது ஏறினோம். ஒரு பாறையின் இடுக்கில் சுனை நீர் தேங்கியிருக்க, அங்கே ஒரு சிறிய •போட்டொ செஷன் நடந்தேறியது. தண்ணீரைக் குடிப்பதும் (என்ன இனிப்பு!), காலால் அளைவதும், கைகளால் தொட்டுப் பார்ப்பதுமாக நேரம் போனதே தெரியவில்லை. மலை மீது ஒரு பாறை விட்டு வைக்காமல் எல்லாவற்றிலும் ஏறிக் கை வரிசை மற்றும் கால்வரிசைகளைக் காண்பித்த பிறகு, இறங்க மனமில்லாமல் இறங்கினோம். இப்பொழுது கொதிக்க ஆரம்பித்த பாறைப் பிரதேசங்களைத் தாண்டிக் கொண்டு நாங்கள் வேன் அருகில் வந்து சேர்ந்த பொழுது காலை மணி பத்து.