Entry: Gangai konda Cholapuram - # 3 Sunday, September 05, 2004கங்கை கொண்ட சோழபுரம் - # 3

For a picture version of this post, go here.

ஓலைகளையும் தாண்டி, இடுக்குகளின் வழியே காற்று மெல்லப் பரவியது. தரை மட்டத்தில் நடமாடிய மனிதர்களின் பேச்சுக்குரல் கசமுசா என்று எங்களை எட்டின.

ஏறக்குறைய அந்தரத்தில் நின்றவாறு, பாதங்கள் துறுதுறுக்க, நாங்கள் பாடம் கேட்டுக்கொண்டிருந்தோம்.

சற்று நேரத்தில் அதற்கும் மேல்தளத்திற்குப் போவது பற்றிய பேச்சு கிளம்பியது. (சும்மா தைரியமா ஏறுங்க...அப்படித்தான் explore பண்ணணும். டாக்டர்) . இந்த சமயத்தில்தான், எங்களுடன் முதல்நாளே வந்திருக்க வேண்டிய நண்பர், எங்கே விட்டுவிடப்போகிறோமோ என்ற பயந்தவாறு சாரத்தின் மீது ஏறி, வியர்த்து வழிய வந்து சேர்ந்துகொண்டார்.

இதுக்கு மேல ஏறமுடியாதுங்க...கீள படிக்கட்டைப் பிரிச்சிட்டம். என்றார் ஒருத்தர்.

அதையெல்லாம் கவனத்தில் வைத்துக்கொள்ளூம் பொறுமை எங்களுக்கில்லை. மேற்கொண்டு ஏற முடியாதவர்களைத் தவிர்த்து, டாக்டரும், மற்றவர்களும், இடைப்பட்ட பகுதியை ட்ரம், டப்பாக்கள் கியவற்றை வைத்து வசதி செய்துகொண்டு, ஏறியேவிட்டார்கள். மேலே மேலே வளைந்து வளைந்து சென்ற கம்பங்களைப் பற்றிக்கொண்டு சென்று, கலசம் வரையிலும் சென்றும்விட்டார்கள். அங்கு, நந்திகளின் மேல் அமர்ந்தவாறே (இதனாலேயே குழு நண்பர் ஒருவர் நந்தியைக் கண்ட நாயகர் என்ற சரித்திரப் பெயர் பெற்றார்), இளநீர் தாகசாந்தி நடந்தது. என்ன சொல்லுங்கள், வெய்யில் பொழுதுக்கு குளிர்ந்த இளநீரைப் போல் வேறு ஒன்றும் இனிப்பதிலை.


மதியம் சுமார் நான்கு மணிக்கு, கோயிலின் தளங்களிலிருந்து இறங்கி, மறுபடியும் தரையைத் தொட்டு, பசியின் அவசரத்தின் எல்லோருமாக ஒரு வாழைத் தாரையே காலி செய்த பிறகு, (என்னதான் ஒப்பிட முடியாது என்றாலும்) இமயமலையைத் தொட்டுவிட்ட டென்ஸிங், ஹில்லரி போன்ற சாதனையாளர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று புரிவது போல் இருந்தது. 

அரை மணி நேரம் கழித்து ஜெயங்கொண்டானில் மதிய உணவிற்குச் சென்ற பொழுது, எல்லோருமே அலுத்துக் களைத்திருந்தோம்.

வெயில் தாழ ஆரம்பித்திருந்த பொழுது, இராஜேந்திர சோழனின் அரண்மனை இருந்ததாகச் சொல்லப்பட்ட மாளிகை மேட்டிற்குச் சென்றோம். அங்கு ஒரிடத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த சிதைந்த உருவச் சிலைகளை ராய்ந்தோம். ஓரிடத்தில், உடலின் மேல்பக்கம் மட்டுமே உருப்படியாக இருந்த ஒரு பெண்ணின் சிலை காணப்பட்டது. அதன் கீழே, இரும்புத் தகட்டில், பெண் உருவம் என்று எழுதப்பட்டிருந்தது. அடடா...இதுவல்லவா கண்டுபிடிப்பு? என்று வியந்தவாறு, அதற்கு மேல் சிற்ப ஆராய்ச்சியில் இறங்காமல், இராஜேந்திர சோழனின் மாளிகையின் இடிபாடுகள் என்று சொல்லப்பட்ட இடத்திற்குச் சென்றோம்.

சிமெண்ட்டால் கட்டம் கட்டப்பட்ட ஒரு இடத்தில், செங்கல்லால் ஆன சில குட்டிச்சுவர்கள் நின்றன. தமிழகத்தை சிறப்பாக ஆண்ட ஒரு பெருமன்னனின் அரண்மனை, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவாவது மிஞ்சியிருக்கிறதே என்ற எண்ணம் மேலோங்கியது உண்மை.

அருகிலேயே இருந்த மியூசியம் ஒன்றையும் பார்த்துவிட்டு, மீண்டும் க.கொ.சோழபுரத்தின் அழகிய புல்வெளிகளில் அமர்ந்து, சூரியன் தென்னங்கீற்றுகளுக்கிடையில், கோயிலின் மதில்சுவற்றுக்குக் கீழே மறைவதைக் கண்டு இரசித்துவிட்டு,  அங்கிருந்து கிளம்பினோம்.


டாக்டர் கலைக்கோவன் அங்கிருந்தே திருச்சியை நோக்கிக் கிளம்ப, அவருக்கும் அவரது குழுவினருக்கும் நன்றி கூறிவிட்டு, நாங்கள் சிதம்பரத்தை நோக்கிப் பயணமானோம்.

இரவு பதினோரு மணிக்கு வண்டி என்பதால், சிதம்பரம் கோயிலை பார்த்துவிடலாம் என்று நினைத்தவாறு நாங்கள் உள்ளே நுழைய, அப்பொழுதே மணி ஒன்பது (வாயிலில் செருப்பு கண்காணிப்பாளர் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தார்).. ஆர்வக்கோளாறில் நாங்கள் அன்று கற்றுக்கொண்ட பாடங்களையெல்லாம் அங்கிருந்த மண்டபங்களை ஆராய்வதில் செலவழிக்க, நேரம் போனதே தெரியவில்லை.

ஒன்பதரை மணிக்கு திடீரென்று சாப்பாட்டின் நினைவு வந்தது. அடித்து பிடித்துக்கொண்டு அருகில் இருந்த ஒரு ஓட்டலில் நுழைந்தோம்.

பத்தரை மணி சுமாருக்கு, மக்கள் நடமாட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருந்த சிதம்பரத்தின் வீதிகளின் வழியே நடந்து சென்றோம். வெளியூர் செல்லும் பஸ்கள் பாம் என்று சப்தமிட்டவாறு நகர ரம்பித்திருந்தன. ரயில் நிலையத்தை நாங்கள் அடைந்த பொழுது எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

ரயில் இரண்டு மணி நேரம் லேட்.

விதியை நொந்துகொண்டு காத்துக்கொண்டிருக்க மனம் வரவில்லை. விதியை நொந்துகொள்ளாமல், அரட்டையடித்துக்கொண்டு, மசாலா டீ வாங்கிக் குடித்துப் பொழுதைப் போக்கிவிடுவது என்று முடிவு செய்துகொண்டோம். கோட்ஸேவின் மரணம், 1942வில் இந்திய அரசியலின் நிலைமை, நேருஜியின் அரசியல் கொள்கைகள், என்று சுவாரஸ்யமான பேச்சில் இரவு கழிந்தது. அந்த அமைதியான ரயில் நிலையத்தில், நேரம் போனதே தெரியவில்லை.

இரவு இரண்டு மணிக்கு இராமேஸ்வரம் எக்ஸ்ப்ரெஸ் பெருமூச்சுவிட்டவாறு சிதம்பரத்தை அடைந்தது. மறுநாள் காலை ஒன்பது மணிக்கு எங்களை சென்னையில் கொண்டு வந்து சேர்த்துவிட்டது.

அத்துடன், இந்தக் கட்டுரையும் முடிந்தது.

நன்றி, வணக்கம்.

Photos (for the GKC Trip), courtesy :  Mr. S.  Kamalakkannan.


   3 comments

Tamil Paiyan
July 6, 2008   12:03 AM PDT
 
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்
Name A+++(sundar)
December 12, 2006   01:45 AM PST
 
ungaludaya GKC trip i padithavudan nangalum sendru vantha thiruphi kidaithathu. thelliya,neerottamana,thyua nadail ezhuthi ullirgal.thangalin payangal engalukku oru nalla saritira virunthaga ullathu. thodara vazhthum ...A+++
Balaji Hariharan
November 21, 2006   02:48 AM PST
 
Very useful infos. I love reading Kalki and Bala.

Would like to know more about GKC temple and tanjore temple, how to keep in touch.

My cell no. 98845 45454

regards

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments