For picture version of this post, go here : Part 1 and Part 2 ஆவுடையார் கோயிலிலிருந்து கிளம்பிய நாங்கள், மீண்டும் புதுக்கோட்டை வந்து, அறைகளைக் காலி செய்து கொண்டு, திருச்சியை நோக்கிக் கிளம்பினோம். திருச்சிராப்பள்ளியின் மா.இராசமணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குனர் டாக்டர். இரா. கலைக்கோவன் அவர்களின் இல்லத்திற்கு சென்று இறங்கினோம். அவரும் எங்களை ஆர்வத்துடன் வரவேற்றார். அவருடன் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றிப் பேசினோம். நாங்கள் அவரிடம் கேட்ட சில கேள்விகள் பின்வருமாறு: டாக்டர். கலைக்கோவனிடம் கேட்கப்பட்ட கேள்விகள்:
என்னால் இதை நம்ப முடியவில்லை. நீலகண்ட ஸாஸ்திரிகளும், மற்ற சரித்திர நிபுணர்களும் விமானம் ஒரே கல்லால் ஆனது என்று கூறியிருந்தனர். இதற்குப் பிறகு, 1930க்களில் வெளிவந்திருந்த ASIயின் வெளியீடுகளையும், மற்ற சரித்திர சிரியர்களின் புத்தகங்களையும் படித்துப் பார்த்தேன். அவர்கள் எல்லோருமே விமானமும் பிரம்மரந்திரக் கல்லும் ஒரே கல்லால் ஆனது அல்ல என்றே குறிப்பிட்டிருந்தனர். உண்மையில், தஞ்சைக் கோயிலின் விமானத்தின் கற்கள் ஆரஞ்சுச் சுளைகளைப் போல் அடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். விமானத்தின் மீது சுதைப் பூச்சு இருப்பதைக் காணலாம். விமானம் ஒரே கல்லால் ஆனது என்றால், வெளியிலே சுதைப் பூச்சு எதற்கு? விமானம் ஒரே கல்லால் ஆனது இல்லை என்பதால், சாரங்களுக்கும் தேவையில்லாமல் போய்விட்ட்து. சாரப்பள்ளம் என்ற கிராமத்திலிருந்து சாரங்களை உபயோகித்தார்கள் என்பதற்கும் எந்த தாரமும் இல்லை. சிறிய அளவிலான கற்களை, உருளைகளை( pulley system) உபயோகித்து மேலே ஏற்றினார்கள்.
இல்லை. அந்த நிகழ்ச்சி கல்கியின் கற்பனையில் உருவானது.
இதையெல்லாம் மீறி, தாராசுரத்திலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும் , அற்புதமான கற்பனைத் திறத்துடன் கூடிய அழகிய சிற்பங்களைக் காணலாமே?
இராஜ ராஜனின் மரணம் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் இல்லை.
சுந்தர சோழர் மற்றும் இராஜராஜ சோழனின் காலத்தில்தான் சம்புவரையர்கள் இருக்கவில்லையே தவிர, இவர்களுக்குப் பின் வந்த சோழர்களின் காலத்தில் அவர்கள் இருந்தனர். ஆதித்த கரிகாலன் கடம்பூரில்தான் கொல்லப்பட்டான் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. வீரநாராயணபுரத்து ஏரியில் அவன் உடல் மிதந்தது என்றே வைத்துக் கொண்டாலும், சுற்றுப்பட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் அவன் கொலை செய்யப் பட்டிருக்கலாம். இவற்றுக்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. வெறும் ஊகம் தான்.
ஆண்களுக்குச் சமமான கல்வி வாய்ப்புகள் பெண்களுக்கும் அளிக்கப்பட்டிருந்தன. இல்லாவிட்டால் இளவரசி குந்தவையைப் போன்ற அறிவாளியை நாம் எப்படிப் பெற்றிருக்க முடியும்?
நாயக்கர் காலத்தில் பல சிற்பங்கள் தஞ்சைக் கோயிலில் புதிதாகச் சேர்க்கப்பட்டன. நீங்கள் குறிப்பிடும் சிற்பம் இரண்டாம் சரபோஜி மன்னரின் காலத்தைச் சேர்ந்தது.
அக்காலத்தில் காந்தளூர்ச் சாலையில், போர்முறைகளில்(Martial Arts) பயிற்சி கொடுக்கும் கடிகை ஒன்று இருந்திருக்கிறது. ஒரு சமயம், இராஜராஜ சோழன் அனுப்பிய தூதுவனை அந்தக் கடிகையைச் சேர்ந்தவர்கள் அவமதித்துவிட்டதால், மன்னன் அவர்களுடன் போர் தொடுத்து, கடிகையைத் தரை மட்டமாக்கினான். இந்தச் சம்பவத்துடன், ரவிதாசனுக்கோ, ஆதித்த கரிகாலனின் கொலைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை.
இல்லை. விமானம் எந்தக் காலத்திலும் தங்கத்தால் வேயப்படவில்லை.
இராஜராஜனின் மரணத்தினால்தான் கோயில் வேலைகள் நின்றுவிட்டன. பரதநாட்டியக் கரணங்கள் மட்டுமல்ல, பல ஓவியங்களும் சிற்பங்களும் கூட முடிக்கப்படவில்லை. என்ன காரணத்தினாலோ, இராஜேந்திர சோழன் அவற்றை முடிப்பதில் தீவிரம் காட்டவில்லை.
பொன்னியின் செல்வனின் அநிருத்தப் பிரம்மராயரும், உடையார் சரித்திர நாவலின் கிருஷ்ணன் இராமனும் வேறு வேறு மனிதர்கள். அநிருத்தர், சுந்தர சோழரின் அமைச்சராகப் பதவி வகித்தார். கிருஷ்ணன் இராமன், இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் தளபதியாகப் பதவி வகித்தவர். மூன்று அரசர்களுக்குத் தொடர்ந்து அமைச்சராகப் பதவி வகித்த ஒரே மனிதர் ஒட்டக்கூத்தர் மட்டுமே.
இது பற்றிய விவரங்கள் எந்தக் கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாகக், கல்வெட்டுக்களைப் பொறுத்தவரை, உத்தம சோழரின் காலம் இருண்ட காலமாகவே கருதப்படுகிறது. வெகு சில கல்வெட்டுக்களே அவர் காலத்திலிருந்து நமக்கு மிஞ்சியிருப்பதால், இராஜராஜன் பதவியேற்ற போது, உத்தம சோழர் இறந்துவிட்டாரா, அல்லது பதவியிறக்கம் செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை.
உடையார்குடியில் கண்டெடுத்தவை தவிர, இது விஷயமாக வேறு கல்வெட்டுக்கள் எதுவும் இது வரை கண்டெடுக்கப்படவிலை. ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களின் பெயர்களும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒன்பது முப்பதுக்கு திருச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து இறங்கினோம். அங்கிருந்தே பஸ் பிடித்துச் செல்வதாகச் சொன்ன ராஜாவுக்கும், திரு. சீதாராமனுக்கும் விடை கொடுத்து அனுப்பிவிட்டு, ரயிலேறினோம். மறுநாள் காலை நாலரை மணி சுமாருக்கு சிங்காரச் சென்னை வந்து சேர்ந்தோம். ************************* |
![]() | ![]() | ![]() |
Michael Kors Classic Tote September 20, 2012 06:13 AM PDT ![]() so pretty.You are a good teacher. Lucky student!,185328,http://pavithra.blogdrive.com/comments?id=8 | ||
![]() |
![]() | ![]() | ![]() |
Moncler 2012 September 12, 2012 04:55 PM PDT ![]() Nice, and thanks for sharing this info with us.Good Luck!,547897,http://pavithra.blogdrive.com/comments?id=8 | ||
![]() |
![]() | ![]() | ![]() |
belstaff jackets July 1, 2012 12:31 AM PDT ![]() I smell the taste of wine. see you! "We do not talk more that day. We stood up, shook his hand and eye lookedeach and so on. Bees were shut out, but came to backhesitatingly.,106506,http://pavithra.blogdrive.com/comments?id=8 | ||
![]() |
![]() | ![]() | ![]() |
shop Pandora Rings May 1, 2012 07:51 PM PDT ![]() I recently came across your blog and have been reading along. I thought I would leave my first comment. I don't know what to say except that I have enjoyed reading. Nice blog. I will keep visiting this blog very often.,567962,http://pavithra.blogdrive.com/comments?id=8 | ||
![]() |
![]() | ![]() | ![]() |
nike max chaussure April 22, 2012 09:04 AM PDT ![]() Super cute! My little man would look so stylin' in those!,899475,http://pavithra.blogdrive.com/comments?id=8 | ||
![]() |
![]() | ![]() | ![]() |
nike air max chaussures soldes April 14, 2012 10:25 AM PDT ![]() i went to the same school as patrick. i remeber those girls from my school who wrote in. they were white trash...i always felt so bad for them.,427857,http://pavithra.blogdrive.com/comments?id=8 | ||
![]() |
![]() | ![]() | ![]() |
dharumi December 19, 2006 11:04 PM PST ![]() ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களின் பெயர்களும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன// அவர்கள் யாரோ..? ஒரு சஸ்பென்சோடு முடித்தது போல் ஒரு எண்ணம்... | ||
![]() |
![]() | ![]() | ![]() |
ஓக December 18, 2006 10:49 PM PST ![]() பவித்ரா ஸ்ரீனிவாசன், உங்களுடைய இந்தப் பதிவை என் கதையின் பின் குறிப்பில் சுட்டியாகக் கொடுத்திருக்கிறேன். என் கதை: http://oagaisblog.blogspot.com/2006/12/blog-post_19.html படித்துப் பார்த்து கருத்துகளைச் சொன்னால் மகிழ்வேன். | ||
![]() |
![]() | ![]() | ![]() |
kalpanasruthi June 20, 2004 12:15 AM PDT ![]() ippa irukkira nandhi nayakkar period-la kattinathunnu theriyum.. ! pazhaiya nanthi..(that's nanthi in rrchola's period)..yen chinnathaa irunthathu..?? piragu yen kalki.. ps-3rd-part-il "nanthi valarnthathu" episode-ill appadi solraar??(arulvarma's soolurai). | ||
![]() |
![]() | ![]() | ![]() |
kalpanasruthi June 20, 2004 12:15 AM PDT ![]() ippa irukkira nandhi nayakkar period-la kattinathunnu theriyum.. ! pazhaiya nanthi..(that's nanthi in rrchola's period)..yen chinnathaa irunthathu..?? piragu yen kalki.. ps-3rd-part-il "nanthi valarnthathu" episode-ill appadi solraar??(arulvarma's soolurai). | ||
![]() |
![]() | ![]() | ![]() |
Princess June 19, 2004 11:35 PM PDT ![]() Tanjore temple nandi chinnathaa irukkaa?:-)) Even so, the Nandhi in Tanjore temple was built in the Nayakar period, I believe. So it was probably a mix-up. You can still join trips - if you're in Chennai.:-)) | ||
![]() |
![]() | ![]() | ![]() |
kalpanasruthi June 18, 2004 01:33 PM PDT ![]() Like 2nd qn(in k.k's q & a).rrchola thannoda future plan-il periya nandhi vaikkapporatha solvar<.PS-3rdpart-ill-nanthi vaLarnthathu episode-ill>---aana Tanjore temple nandhi.. chinnatha thanE irukku.Then..why kalki use that words in PS. pi.ku : che! PS group-la oru 2 yrs b4 a join pannirukkakoodathaannu ninaikkaren. I missed a lot. | ||
![]() |
Leave a Comment: |